செவிலியர் உடையணிந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் பணிசெய்ய களத்தில் இறங்கிய ஸ்வீடன் இளவரசி!!!

ஸ்டாக்ஹோம்: செல்வ செழிப்பில் பிறந்து வளர்ந்த ஸ்வீடன் நாட்டு இளவரசி இப்போது கொரோனா ஒழிப்பு களப்பணியில் குதித்துள்ளார்..நர்ஸ் அணியும் புளூ கலர் யூனிபார்ம் அணிந்து மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்காக தீவிரமாக சேவை செய்து வருகிறார். உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிவிட்டது. இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த வைரசால் ஸ்வீடன் நாட்டில் 12,500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,300 க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் 35 வயதான ஸ்வீடன் நாட்டு இளவரசி சோபியா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கிவிட்டார். இவர் ஆன்லைனில் இதற்காக 3 நாள் பயிற்சியினை முடித்தபின் அந்நாட்டுத் தலைநகரில் இருக்கும் சோபியாஹெமெட் மருத்துவமனையில் தன்னார்வத் தொண்டு செய்ய தொடங்கியுள்ளார்.மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக பணியில் சேர்ந்துள்ள இளவரசி சோபியா, கொரோனா நோயாளிகளை கையாள்வதில் நேரடியாக ஈடுபட மாட்டார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது, மருத்துவர் அல்லது சுகாதார பணியாளர்களுக்கு உதவும் பணியில் ஈடுபடுத்தப்படுவார் என்று நிர்வாகம் கூறியுள்ளது.இளவரசி சோபியா போல நம்மூரிலும் யாராவது இறங்கி இப்படி வேலை பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்!!!

Related Stories: