நிவாரண பொருட்கள் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் கண்ணகி நகரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தினக்கூலி தொழிலாளர்களே இங்கு அதிகம் வசிக்கின்றனர். வடசென்னை பகுதியில் வசித்த பலர் தற்போது கண்ணகி நகரில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது குடும்ப அட்டை தற்போது வரை வடசென்னை பகுதி கடைகளிலேயே உள்ளது. தற்போது, போக்குவரத்து வசதி இல்லாததால், தமிழக அரசின் நிவாரண தொகை மற்றும் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் 300க்கும் மேற்பட்டோர், தங்களது பகுதியிலேயே நிவாரண தொகை மற்றும் பொருட்கள் வழங்க கோரி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து கண்ணகிநகர் இன்ஸ்பெக்டர் வீரக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் இப்படி கூட்டமாக திரள்வது தவறு. எனவே, அனைவரும் கலைந்து செல்லுங்கள். உங்கள் கோரிக்கையை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: