கொரோனாவையும் வென்றார் இரண்டாம் உலக போர் வீரர்

பிரேசிலியா: இரண்டாம் உலகப் போரின் போது பிரேசில் ராணுவப் படையில் பணியாற்றிய 99 வயது முன்னாள் வீரர் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் போது பிரேசில் ராணுவப் படையில் ஆப்பிரிக்காவில் 2ம் லெப்டினென்டாக பணியாற்றியவர் எர்மாண்டோ பிவெட்டா. இரண்டு வாரங்களுக்கு முன் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பிரேசில் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், எட்டு நாட்களுக்கு பின், குணமடைந்து நேற்று அங்கிருந்து வெளியேறிய போது பச்சை நிற ராணுவத் தொப்பியுடன் உற்சாகமாக கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இது தொடர்பாக பிரேசில் ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், `இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியின் மோன்டிசியில் நடந்த போரில் பிரேசில் படை வெற்றி பெற்ற 75வது ஆண்டு நினைவு தினத்தன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இம்முறை பிவெட்டா கொரோனாவுக்கு எதிரான மற்றொரு போரில் வெற்றி பெற்றுள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: