இந்தோனேசியாவில் பேய் வேடத்தில் உலவி மனிதர்களை அச்சுறுத்தும் போலீசார் : ஊரடங்கை கடைப்பிடிக்க நூதன நடவடிக்கை

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஒரு கிராமத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க இரவு நேரங்களில் பேய்கள் போல் வேடமிட்டு சிலரை கிராம மக்கள் அமர்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசை அழிக்க இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தனிமைப்படுத்தல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்கிற நிலை உள்ளது.இதனால் கொரோனா பாதிப்பை எதிர்கொண்டு வரும் பெரும்பாலான நாடுகள் தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தி, மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தி வருகின்றன. ஆனாலும் ஒரு சில

நாடுகளில் மக்கள் ஊரடங்கை உதாசீனப்படுத்தி வழக்கம்போல் வீதிகளில் நடமாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் உள்ள கெபு என்ற கிராமத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தடுக்க ஒரு நூதன நடவடிக்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அது என்னவென்றால் மக்களை பயமுறுத்தி வீடுகளுக்குள்ளேயே இருக்க செய்யும் விதமாக, இரவு நேரத்தில் மனிதர்களுக்கு பேய் வேடமிட்டு சாலைகளில் உலாவவிட்டுள்ளார் அந்த கிராமத்தின் தலைவர்.இதுபற்றி அவர் கூறுகையில், “நாங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தினோம். இது நல்ல பலனளித்துள்ளது. ஆரம்பத்தில் நாங்கள் இதை தனியாக செய்துவந்தோம். தற்போது எங்களுடன் போலீசாரும் கைக்கோர்த்துள்ளனர்” என்றார்.

Related Stories: