அமேசான் காடுகளையும் விட்டுவைக்காத கொரோனா: வைரஸ் தாக்குதலால் பழங்குடியின சிறுவன் உயிரிழப்பு ; இனமே அழிவை சந்திக்கும் அபாயம்

வாஷிங்டன் :  அமேசான் மழைக்காட்டுக்குள் வசிக்கும் யானோமாமி பூர்வகுடி சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கொரோனா வைரசால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் சுமார் 300 பூர்வகுடி சமூகங்களைச் சேர்ந்த எட்டு லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.வெளியுலக தொடர்பு ஏதுமில்லாமல் காட்டின் ஆழமான பகுதிகளில் இவர்கள்  வசித்து வருகின்றனர்.

கடந்த வாரம் கொகாமா என்ற பூர்வகுடி சமூகத்தை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், யானோமாமி என்ற சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டான். இதைத் தொடர்ந்து அந்தச் சிறுவன் Roraima மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தான். ஆனால் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். சிறுவனின் உயிரிழப்பை தொடர்ந்து யானோமாமி பழங்குடியின மக்களை பாதுகாக்கும் முயற்சியில் பிரேசில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அமேசான் பூர்வகுடிகளில் இதுவரை ஏழு பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories: