மீண்டும் சூப்பர் ஸ்டாரான தூர்தர்ஷன் சேனல்: ராமாயணம், மகாபாரதம் மூலம் அதிக மக்கள் விரும்பியுள்ளனர்; BARC தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த வாரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சேனலாக தூர்தர்ஷன் வந்துள்ளது என (BARC) தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 169 உயிரிழந்துள்ளனர். 5865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 24ம் தேதி நள்ளிரவு முதல் வருகிற  ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதன் மூலம், நாடு முழுவதும், ரயில், பஸ் போக்குவரத்து, அரசு, தனியார் அலுவலகங்கள் வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும். சிறிய மளிகை கடை, காய்கறி கடை, மருந்து கடை, பால் விற்பனை, பத்திரிகைகள்  உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அரசு அனுமதித்துள்ளது. இதனால், அத்தியாவசிய சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் தவிர, ஏராளமான நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. சுற்றுலா துறைகள்,  வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் நாடு மக்கள்  விட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இதற்கிடையே, விட்டில் முடங்கியுள்ள மக்களின் பொழுது போக்கிற்காகவும் வரலாற்றின் சிறப்புகளை அறியவும் மத்திய அரசு வழிவகை செய்தது. இதன்படி, மத்திய அரசின் தர்ஷன் தொலைக்காட்சியில், ராமாயணம், மகாபாரதம் ஆகிய  வராலாற்று காவியங்கள் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூர்தர்ஷன் சேனலில், ராமாயண்,  மார்ச் 21- மார்ச் 27-ம் தேதி வரையிலான வாரத்தில் ராமாயணத்துக்கு 1.2 மில்லியன் பார்வையாளர்கள் இருந்த  நிலையில், அடுத்த வாரம் மார்ச் 28-ம் தேதி தொடங்கிய வாரத்தில் அதன்பார்வையாளர்கள் 545.8 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று பார்க்(BARC)  என்று அழைக்கப்படும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல, மகாபாரதமும், 0.4 மில்லியன் பார்வையாளர்களிலிருந்து 145.8 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது. அதேபோல, சக்திமான், ஸ்ரீமன் ஸ்ரீமதி, ஷாருக்கானின் சர்க்கஸ் போன்ற பழைய தொடர்களும் பெரும் வரவேற்பைப்  பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வாரத்தில் சக்திமானுக்கு 0.4 மில்லியன் பார்வையாளர்கள் இருந்த நிலையில் அடுத்த வாரத்தில், 20.8 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். ஷாருக்கான் நடித்திருக்கும் சர்க்கஸ் 0.2  மில்லியன் பார்வையாளர்களிலிருந்து 0.8 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. காலை 9 மணி முதல் 10.30 வரையிலான நேரத்தில் 580 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இது, தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் 39,000 சதவீத  வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: