தர்மபுரி அருகே நிலத்தில் உழவு செய்தபோது ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு

தர்மபுரி:  தர்மபுரி அருகே குட்டூரை சேர்ந்தவர் குமார்(30). இவர் விவசாய நிலத்தில் நேற்று காலை சோளம் விதைப்பதற்காக டிராக்டரில் உழவு ஓட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டிராக்டரின் உழவு கருவியில், கல்போன்ற பொருள் சிக்கியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ேதாண்டியபோது ஒன்றரை அடி உயரத்தில் தாமரை மலரை கையில் ஏந்திய அம்மன் சுவாமி சிலை வெளிப்பட்டது. ஐம்பொன்னால் ஆன அந்த சிலைக்கு அப்பகுதி மக்கள் அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம் தடவி சூடம் ஏற்றி வழிபட்டனர். சிலையில் ஒரு கை உடைந்த நிலையில் உள்ளது. எங்காவது கோயிலில் திருடி விவசாய நிலத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Related Stories: