பாரீஸ்: ‘பத்திரிகைகள், செய்தி நிறுவனங்களின் சிறப்பு செய்திகள், கட்டுரைகளை வெளியிட, கூகுள் நிறுவனம் கட்டணம் செலுத்த வேண்டும்,’ என பிரான்ஸ் ஒழுங்கு முறை அமைப்பு உத்தரவிட்டுள்ளது. பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் வெளியிடும் சிறப்பு செய்திகள், கட்டுரைகள் போன்றவற்றை கூகுள் இணையதளம் பயன்படுத்தி வருகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட பத்திரிகை, செய்தி நிறுவனங்களுக்கு அது கட்டணம் செலுத்த வேண்டும் என்ற போராட்டம், ஐரோப்பாவில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘ஊடகங்களின் பதிப்புகளை கூகுளில் வெளியிட, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கூகுள் கட்டணம் செலுத்த வேண்டும்,’ என்று பிரான்ஸ் ஒழுங்கு முறை அமைப்பு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.