தமிழகத்தில் 14 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 14 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். சென்னை பரங்கிமலை உதவி ஆணையர் சங்கரநாராயணன் மாநில குற்ற ஆவண காப்பகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி ஜீவானந்தம் பரங்கிமலை காவல் சரகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எம்கேபிநகர் உதவி ஆணையர் முத்துக்குமார் புழல் உதவி ஆணையராக மாற்றபட்டுள்ளார். சென்னை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையர் ஹரிகுமார் எம்கேபி நகர் உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: