கொரோனா தொற்று ஏற்படுவதற்கு 5ஜி நெட்வொர்க் தான் காரணம் என்ற வதந்தியால் 20க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களுக்கு தீவைப்பு

லண்டன் : கொரோனா தொற்று ஏற்படுவதற்கு 5ஜி தொழில்நுட்பம்தான் காரணம் என்ற வதந்தியால் இங்கிலாந்தில் 20க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இதனிடையே கொரோனா 5ஜி நெட்வொர்க் மூலம் தான் பரவி வருவதாக தீயாக ஒரு செய்தி பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.

அதாவது, 5ஜி டவர்களில் இருந்து வெளியாகும் அலை வரிசை காற்றில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சிவிடும். அதன்பின் காற்றில் அது முக்கியமான வாயுக்களை வெளியிடும். இந்த வாயுக்கள் மூலம்தான் கொரோனா வைரஸ் பரவும். இது ஒரு நெட்வொர்க் போல பரவும். உலக நாடுகள் இதை திட்டமிட்டு பரப்பி வருகிறது. கொரோனா வைரஸ் என்பது திட்டமிட்ட தாக்குதல் என்று வதந்திகள் வெளியானது.

அதோடு சீனாவில் வுஹன் நகரில் 5ஜி டவர் வைக்கப்பட்டு ஒரே வாரத்தில்தான் கொரோனா வைரஸ் பரவியது. இங்கிலாந்தில் 5ஜி டவர் கொண்டு வரப்பட்டு இரண்டு வாரத்தில் கொரோனா வைரஸ் பரவியது. உலகில் எங்கெல்லாம் 5ஜி டவர் உள்ளதோ அங்கெல்லாம் கொரோனா வைரஸ் பரவுகிறது. தற்போது பிரிடிஷில் கொரோனா வைரஸ் பரவ இதுதான் காரணம் என்று அங்கு தீயாக செய்திகள் பரவியது.இப்படி தொடர்ந்து பரவிய செய்திகள் காரணமாக இங்கிலாந்தில் 5 செல்போன் டவர்கள் கொளுத்தப்பட்டது.

லிவர்பூல், வெஸ்ட் மிட்லேண்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை மக்கள் தீ வைத்து எரித்தனர்.தொலைத்தொடர்பு நிறுவன என்ஜினீயர்களையும், ஊழியர்களையும் பொதுமக்கள் குறிவைத்து தாக்கி வருகின்றனர். இதனால் அங்கு தற்போது பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவிலும் 5ஜி தொழில்நுட்ப சேவைக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.இதனிடையே கொரோனாவுடன் 5ஜி நெட்வொர்க்கை தொடர்புபடுத்துவதற்கு விஞ்ஞானரீதியாக எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: