விளக்கு ஏற்ற சொன்னால் பட்டாசு வெடிப்பதா? ஹர்பஜன் ஆதங்கம்

ஜலந்தர்: விளக்கு ஏற்றுவதற்கு பதிலாக பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தை கண்டித்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ‘கொரானாவுக்கு தீர்வை கண்டுபிடிப்போம் , முட்டாள்தனத்துக்கு எப்படி தீர்வை கண்டுபிடிக்கப் போகிறோம்’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். பிரதமர் மோடி  விடுத்த ‘விளக்கேற்றுங்கள்’ கோரிக்கையை வரவேற்ற விளையாட்டு பிரபலங்களில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் ஒருவர். மேலும் பலரையும் பிரதமர் சொன்னபடி ‘மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு ஏற்றுங்கள்’ என்று கோரிக்கையும் விடுத்திருந்தார். அதுமட்டுமல்ல அவரது சொந்த ஊரான பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஆதரவற்ற 5000 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

Advertising
Advertising

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் வேண்டுகோள்படி விளக்கு ஏற்றியவர்களில் சிலர் பட்டாசும் வெடித்து அதை கொண்டாட்டமாக மாற்றினர். அப்படி வெடித்த பட்டாசுகள் சில இடங்களில் தீ விபத்துக்கும் காரணமாகி விட்டன. அப்படி ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் ஏற்பட்ட தீ விபத்து வீடியோ ஒன்றை பத்திரிகையாளர் ஒருவர்  சமூக ஊடகத்தில் நேற்று முன்தினம் இரவு பகிர்ந்து இருந்தார். அதை மீண்டும் பகிர்ந்த ஹர்பஜன் சிங்,‘கொரானாவுக்கு தீர்வை கண்டுபிடிப்போம், இதுபோன்ற முட்டாள்தனத்துக்கு எப்படி கண்டுபிடிக்கப் போகிறோம்’ என்று தனது ஆதங்கத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: