பாஜகவின் 40-வது ஆண்டு நிறைவு தினம்: கொரோனா தொற்று நோய் குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள்...தொண்டர்களிடன் பிரதமர் மோடி உரை

டெல்லி: பாஜகவின் 40-வது ஆண்டு நிறைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தொண்டர்களிடம் உரையாற்றினார். பாரதிய ஜனதா கட்சி இந்திய அரசியலின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகும். பாரதிய ஜன சங்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயைத் தலைவராகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி, கடந்த 1980 ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி புதியதாக உருவாக்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கட்சி, நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. இதை பாரதிய ஜனதா கட்சி அல்லது சுருக்கமாக பாஜக என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று பாரதிய ஜனதா கட்சியின் 40-வது நிறுவன நாளை முன்னிட்டு கட்சியின் தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, பாஜக தொண்டர்கள் கொரோனா தொற்று நோய் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரோனாவால் இந்தியா மட்டுமல்ல; உலகமே கடும் சோதனையில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். கொரோனாவை எதிர்ப்பில் சில கடினமான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

கொரோனாவை தடுக்க இந்தியா எடுத்துள்ள நடவடிக்கையை உலக சுகாதார அமைப்பு பாராட்டி உள்ளது. ஜி-20 மாநாட்டிலும் கொரோனா எதிப்பில் இந்தியா முன்னோடியாக திகழ்ந்தது. கொரோனா எதிர்ப்பில் இந்தியாவின் பணியை உலகமே பாராட்டுகிறது. கொரோனாவுக்கு எதிராக மக்கள் இதயப்பூர்வமாக ஒன்றுப்பட்டு வெற்றி பெற உறுதி பூண வேண்டும். கொரோனவுக்கு எதிராக முழுவீச்சிலான போரில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில், ஊரடங்கு அமல்படுத்தும் போது மக்கள் காட்டிய முதிர்ச்சி முன்னோடியில்லாதது. இத்தகைய கீழ்ப்படிதலுடனும் சேவை உணர்வுடனும் மக்கள் இதைக் கடைப்பிடிப்பார்கள் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது என்றார்.

பிரதமர் மோடி டுவிட்:

பாஜகவின் 40-வது ஆண்டு நிறைவு தினத்தையொட்டி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வழிகாட்டுதல்களை, பாஜக நிர்வாகிகள் பின்பற்றுமாறு பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா வைரஸ் உடன் இந்தியா போராடும் இந்த தருணத்தின் போது, நமது பாஜக கட்சியின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறோம். இந்நாளில் பாஜக கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவின் வழிகாட்டுதல்களை பாஜக நிர்வாகிகள் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுங்கள். சமூக விலகளையும் கடைபிடியுங்கள்.

இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்றுவோம். பாஜகவுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், நல்லாட்சி மற்றும் ஏழைகளுன் வாழ்வாதாரத்தை மேம்படுத்திவதில் கட்சி கவனம் செலுத்தியுள்ளது. பல சாகப்தங்களாக கட்சியைக் கட்டியெழுப்ப கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி, இவர்களால் தான்  நம் நாட்டின் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சேவை செய்ய பாஜகவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: