தடை உத்தரவை மீறி நடைபயிற்சி அரசு பெண் ஊழியரிடம் 3 சவரன் செயின் பறிப்பு

அண்ணாநகர் அண்ணாநகரில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் நடைபயிற்சி செய்த அரசு பெண் ஊழியரின் 3 சவரன் செயினை பைக் ஆசாமிகள் பறித்து சென்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து வணிக நிறுவனங்கள், மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு, மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு தடைவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் வேலை பார்க்கும் அரசு பெண் ஊழியரான அண்ணாநகரை சேர்ந்த ரேவதி (48), நேற்று காலை ஊரடங்கு உத்தரவை மீறி, அண்ணாநகர் 2வது அவென்யூ சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

Advertising
Advertising

அப்போது அவ்வழியே பைக்கில் வந்த 2 பேர், ரேவதியை வழிமறித்து, அவரது கழுத்தில் கிடந்த 3 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.  இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் ரேவதி புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: