ஜம்மு: ஜம்மு காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்முவின் பல்வேறு பகுதியில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே, கொரோனா முடக்கம் காரணமாக வீடுகளில் பீதியுடன் முடங்கியுள்ள மக்களுக்கு, இந்த நிலநடுக்கம் கூடுதல் பீதியை அளித்தது. சில இடங்களில் வீடுகள் குலுங்கின. இருப்பினும், எந்த சேதமும் ஏற்படவில்லை. இதேபோல், கர்நாடகாவிலும் சில இடங்களில் நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது.