சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 3,300க்கும் மேற்பட்டோருக்கு அந்நாட்டு அரசு சார்பில் நேற்று காலை 10 மணிக்கு 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றார். அப்போது விமானம், கார்களில் இருந்து ஒலி எழுப்பி அஞ்சலி தெரிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து முதன் முதலாக உலகிற்கு தெரியப்படுத்திய மருத்துவர் லீ வென்லியாங்க் உட்பட, கொரோனாவுக்கு பலியான அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.