கீழக்கரை அருகே இரவு, பகலாக மக்கள் குடிநீருக்கு காத்திருப்பு

கீழக்கரை: கீழக்கரை அருகே உள்ள திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட தில்லையேந்தல் ஊராட்சி பகுதியில் உள்ள சின்ன பாலையரேந்தல், மோர்குளம், மருதன் தோப்பு, உள்பட 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த கிராமத்தில் குடிநீர் குழாய்கள் இருந்தும் அந்த குழாய்களில் தண்ணீர் வராததால் 2 கி.மீ தூரத்தில் உள்ள கீழக்கரை துணை மின்நிலையம் அருகில் உள்ள இரண்டு குழாய்களில் வரும் தண்ணீரை இரவு, பகலாக காத்திருந்து பிடித்து வருகின்றனர்.இந்த இரண்டு குழாய்களில் வரும் தண்ணீரை தான் ஆயிரக்கணக்கான நம்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் எப்பொழுதும் கூட்டம், கூட்டமாக பெண்கள் காலி குடத்துடன் காத்துக் கிடக்கின்றனர்.இக்கிராமத்து பெண்கள் 2 கி.மீ தூரத்தில் இருந்து தண்ணீர் பிடிக்க வருகின்றனர். இதனால் இரவும், பகலுமாக குடிநீருக்காக தூக்கமின்றி காத்துக் கிடக்கிடக்கும் அவலம் நிலவுகிறது.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தற்போது கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் சூழலில்,சமூக பரவலை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. ஆனால், குடிநீர் கிடைக்காத நிலையில் கூட்டம், கூட்டமாக பெண்கள் இரவு, பகலாக காத்திருந்து தண்ணீர் பிடிப்பது சமூக ஆர்வலர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து கிராமங்களில் உள்ள குடிநீர் குழாய்களில் குடிநீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: