வியாபாரிகள் வராததால் பாபநாசத்தில் 50 ஏக்கர் வாழை பழுத்து நாசம்: தர்பூசணி பழங்களும் அழுகின

பாபநாசம்: தஞ்சை மாவட்டம் பாபநாசம், அதனை சுற்றியுள்ள இளங்கார்குடி, வன்னியடி, நாயக்கர்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் 50 ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்தன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, பச்சைநாடான், பூவன் வகை பழங்கள் நடப்பட்டது. தற்போது வாழைகளில் தார்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஊரடங்கு உத்தரவால் வாழைத்தார்களை வாங்க வியாபாரிகள் வரவில்லை. இதனால் தார்கள் அறுவடை செய்ய முடியாமல் மரத்திலே உள்ளதால் பழுத்து வீணாகிறது.

ஒரு கன்றுக்கு ரூ.100 வீதம் ஏக்கருக்கு ரூ.1லட்சத்துக்கு மேல் செலவு செய்து நடவு நடப்பட்டது. தற்போது வாழைத்தார்கள் விற்பனையாகாததால் விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பழுத்த வாழைப்பழங்களை மக்களுக்கு இலவசமாக அளித்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதேபோல் தர்ப்பூசணி பழங்களும் அறுவடை செய்யமுடியாமல் அழுகி வீணானதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

Related Stories: