கொரோனா தடுப்பு பணியில் நேரடியாக களம் இறங்கிய முதல்வர் மம்தா :தாமே தெருவில் வட்டங்களை வரைந்து சமூக விலகல் குறித்து மக்களுக்கு அறிவுரை

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்புப் பணியில் நேரடியாக களம் இறங்கியுள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தமது எளிமையான அணுகுமுறையால் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா  பானர்ஜி, கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதையே தமது அன்றாட முழுநேர பணியாக மாற்றியுள்ளார். ஒவ்வொரு நாளும் காலையில் கொல்கத்தா காய்கறி சந்தைகளுக்கு செல்லும் அவர், சமூக இடைவேளியை உறுதி செய்யும் வகையில், தாமே வட்டங்களை வரைந்து மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.

பின்னர் மருத்துவமனைகளுக்கு சென்று கொரோனா சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார். தமது பயணத்துடனையே ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரை சாலையிலேயே சந்தித்து ஆலோசனை வழங்குகிறார்.அரசியலில் அதிரடிகளுக்கு பெயர்போன மம்தா பானர்ஜியின் இந்த எளிமையான அணுகுமுறை மேற்கு வங்க மாநில மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற அம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் கூட மம்தாவுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.  

Related Stories: