கொரோனா தடுப்பு நடவடிக்கையின் திடீர் ஊரடங்கால் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஊர் திரும்ப முடியவில்லை: தப்லீக் ஜமாஅத் விளக்கம்

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் திடீர் ஊரடங்கால் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஊர் திரும்ப முடியவில்லை என்று தப்லீக் ஜமாஅத் விளக்கம் அளித்துள்ளது. டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் தவுஹித் ஜமாத் அமைப்பின் சார்பில் தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் இத்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் நிகழ்வில் சுமார் 1600 பேர் கலந்து கொண்டனர். இதில் 250 பேர் வெளிநாட்டினர்.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, நிஜாமுதீன் மர்காஸ் கட்டிடத்தில் தங்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. மொத்தம் 1033 பேர் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் 334 பேர் மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும், 700 பேரை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியிருந்தார். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் திடீர் ஊரடங்கால் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஊர் திரும்ப முடியவில்லை என்று தப்லீக் ஜமாஅத் விளக்கம் அளித்தது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்து தப்லீக் ஜமாஅத் விளக்கம் அளித்துள்ளது. 3 முதல் 5 நாட்கள் நடைபெறும் மத மாநாட்டுக்கு வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து சிலர் வந்தனர். 22-ம் தேதி பிரதமர் மோடி திடீரென ஊரடங்கு அறிவித்ததால் பலர் ஊர் திரும்ப முடியாமல் முடங்கினர். டெல்லி மர்காஸ் நிஜாமுதீன் வளாகத்தை கொரோனா சிகிச்சை மையமாக வழங்குவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் 1,500 பேர் வெல்வேறு போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி டெல்லியில் இருந்து புறப்பட்டனர் என விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories: