வீடுவீடாக பரிசோதனை தீவிரமாக நடக்கிறது: ஆர்.பி.உதயகுமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்

* 96 ஆயிரம் பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்தந்த மாவட்டங்களில் தற்போது வரை 60 ஆயிரம் பேர் தனிமைப்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தங்கி பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது இங்கிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதை தவிர்க்கும் வகையில் உணவு, தங்கும் இடம், சுகாதார வசதி செய்து தர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் வருவாய்த்துறை சார்பில், 37 வருவாய் மாவட்டங்களில் வெளிமாநிலத்தினரை அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தும் நபர்களுக்கு அவர்களை தங்க வைத்து உணவு உள்ளிட்டவை செய்து தரும் வசதிகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய சொல்லி இருக்கிறோம்.   அவர்களால் முடியவில்லை என்றால், உடனே அரசு அவர்களுக்கு உணவு, தங்கும் இடம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தருகிறது.

இதனால், தான் மற்ற மாநிலங்களில் உள்ள பிரச்சனை நமது மாநிலத்தில் இல்லை. நேற்று கோவை, வேலூர் மாவட்டங்களில் தங்கி பணிபுரியும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை வைத்தனர். இதையேற்று அவர்கள் உடனடியாக காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு ேதவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை 4 இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.3280 கோடி நிவாரண பொருட்கள் அறிவித்ததில் கூட இங்குள்ள தொழிலாளர்களை போன்று வெளிமாநில ெதாழிலாளர்களுக்கு விலையில்லா தொகுப்பு பொருட்கள் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நமது மாநிலத்தில் அதனால் தான் கட்டுபாட்டில் உள்ளது. வருவாய் நிர்வாக ஆணையரும் 37 வருவாய் மாவட்டங்களில் மாவட்ட கலெக்டரிடம் நிலவரத்தை ேகட்டு தெரிந்து கொள்கிறார்கள். எங்கேயாவது பிரச்சனை என்றால் உடனே அதை கேட்டு சரி செய்து வருகிறார்கள்.  வெளிநாட்டில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி விமான நிலையத்தில் இறங்கியவர்கள் போக, வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் ெதாடர்பாக விமான நிலைய அதிகாரிகள் மூலமாக பட்டியல் பெறப்பட்டு அது தொடர்பாக வீடு, வீடாக சென்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் முழு மூச்சில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறத்தாழ 96 ஆயிரம் பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அந்தெந்த மாவட்டங்களில் தற்போது வரை 60 ஆயிரம் பேர் தனிமைப்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மை சார்பில் மற்ற பேரிடரின் போது எப்படி செயல்படுவோமோ அதே போன்று தற்போதும் இந்த பேரிடருக்கும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் சார்பில் தற்போது விவசாயிகள் பொருட்களை கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்களை தவிர்க்கும் வகையில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் அவர்களது வாகனங்களுக்கு பாஸ் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் தொடங்கி நோய் தொற்று உள்ளவர்களை கண்காணிப்பது, வெளிமாநில, வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனரா என்பதை கண்காணிப்பதில் கிராம நிர்வாக அலுவலர் தொடங்கி தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் அலுவலர் உட்பட 35 ஆயிரம் பேரும் ஒவ்வொரு நாளும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிமாநில தொழிலாளர்கள் தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட தேவையான வசதிகளை அந்தெந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணித்து வருகிறது. அவர்கள் எவ்வளவு பேர் தங்கியுள்ளனர் என்பது தொடர்பாக பட்டியல் தயார் செய்து மாவட்ட கலெக்டர்கள் வருவாய்த்துறைக்கு அனுப்பும் வேளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: