தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 17, 668 பேர் கைது; 11,565 வாகனங்கள் பறிமுதல்...தமிழக காவல்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளிவந்த 15 ஆயிரத்து 610 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 17 ஆயிரத்து 668 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 11,565 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கி பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, இந்தியா முழுவதும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 979  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

அதேபோல் தமிழக அரசு அறிவித்திருந்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக 144 தடை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும்நிலையில் 144 தடை உத்தரவை மீறி வெளியே சென்றோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது ,வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மற்றும் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது 5 நாட்களில் எத்தனை வழக்குகள், எத்தனை வாகனங்கள், எத்தனை கைதுகள் நடைபெற்றுள்ளது என்பது தொடர்பான தகவல்களை காவல்துறை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 5 நாட்களில் 11,565 வாகனங்கள் தடையை மீறி வெளியே வந்ததற்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, 14,815 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, 17,668 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கிடையே, சென்னையில் இருந்து அவசர தேவைகளுக்கான பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது வரை இந்த பயணத்திற்கு வெளியூர் செல்ல சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் எனவும் தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: