டாஸ்மாக்கில் கொள்ளை

கும்மிடிப்பூண்டி:  கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமம், மாந்தோப்பு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு கடையின் மேலாளர் ராக்கம்பாளையத்தை சேர்ந்த துளசிராமனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து கடைக்குள் சோதனை செய்ததில், அங்கு விற்பனைக்கு வைத்திருந்த ₹1 லட்சம் மதிப்புள்ள 10 பெட்டி மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. மேலும், கடைக்குள் இருந்த 4 சிசிடிவி கேமராக்களையும் உடைத்து மர்ம நபர்கள் எடுத்து சென்றிருப்பதும் தெரியவந்தது.
Advertising
Advertising

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடுகின்றனர். ஏற்கெனவே இதே கடையில் ₹70 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: