அரசு மருத்துவமனையில் தட்டுப்பாடு ஏற்பட்டால் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு : 700 படுக்கைகள் கொண்ட வார்டு தயார்

* ரயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்ற முடிவு

சென்னை: தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அனைத்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே மருத்துவமனையிலும் ரயில்வே ஊழியர்களுக்கு ெகாரோனா பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தெற்கு ரயில்வேவுக்கு உட்பட்ட சென்னை, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்கோடு ஆகிய கோட்டங்களில் ரயில்வே மருத்துவமனை செயல்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைத்து ரயில்வே மருத்துவமனைகள் மற்றும் விடுதிகளில் 700க்கும் மேற்பட்ட படுக்கை வசதியை ஏற்படுத்தி இருக்கும்படி தெற்கு ரயில்வே சார்பில் மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து எழும்பூர் மற்றும் பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக வார்டுகள் மற்றும் மருத்துவர்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ரயில்வே ஊழியர்கள் மற்றும் சிகிச்சை அளிக்க இந்த மருத்துவமனைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பணிமனைகளில் காலியாக இருக்கும் ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றம் செய்து சிகிச்சை அளிக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: