சென்னை வருகை, புறப்பாடு 506 விமான சேவை ரத்து

சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சர்வதேச விமான சேவை தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல உள்நாட்டு விமான சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை முதல் சென்னையில் புறப்பாடு 196, வருகை 196 என மொத்தம் 392 விமானங்களின் சேவை ரத்து செய்யபட்டது. இதனால் தினமும் இயக்கப்பட்ட 506 பயணிகள் விமான சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. அதே நேரத்தில் சென்னை பழைய விமானநிலையத்தில் சரக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. நள்ளிரவு 12.30 மணிக்கு ஹாங்காங்கில் இருந்து கேத்தே பசிபிக் ஏர்லைனஸ் சரக்கு விமானம் சென்னைக்கு வந்து விட்டு, அதிகாலை 3 மணிக்கு பெங்களூரு புறப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் அதிகாலை 5 மணிக்கும், மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் காலை 6.30 மணிக்கும் சென்னை வந்தன. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், விமான நிலைய சரக்கக பகுதியில் பணியாற்றும் லோடர்கள் அத்தியாவசிய பணி என்ற அடிப்படையில் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: