5 நாட்களாக புதிதாக கொரோனா தொற்று இல்லை என்று கூறப்பட்ட நிலையில், சீன மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங் :  சீனாவில் கடந்த 5 நாட்களாக புதிதாக கொரோனா தொற்று எதுவும் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் வுகான் நகரில் தோன்றி இன்று உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளும் லாக்-டவுன் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், சீனாவின் கொரோனா மையமான ஹூபேய் மாகாணத்தில் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுள்ளன. ஆரோக்கியமானவர்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் சீனாவில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் இல்லை. மாறாக அயல்நாட்டிலிருந்து சீனா திரும்பிய சீன நாட்டவர்கள் 473 பேருக்கு பாதிப்பு உள்ளதாக அந்நாட்டு சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாததால் 5 கோடி மக்களுக்கும் மேல் வசிக்கும் ஹூபேயின் கட்டுப்பாடுகள் அகற்றப்படுவதாக சீனா அறிவித்துள்ளது. சில விமானநிலையங்கள், ரயில் நிலையங்கள் திறந்துள்ளன.வூஹான் மாகாணத்தின் குடியிருப்புவாசிகள் ஏப்ரல் 8ம் தேதி முதல் வீட்டைவிட்டு வெளியே வரலாம் என்று கூறப்பட்டுள்ளது,இந்நிலையில் ஹூபேய் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் மருத்துவருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 5 நாட்களுக்கு மீண்டும் ஒருவருக்கு தொற்று உறுதியாகி இருப்பது சீன மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: