கொரோனா தொற்று அறியும் கருவி புதிய விதிமுறைகளை திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை:  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அரசின் நல்வாழ்வுத்துறை, கடந்த சனிக்கிழமையன்று, கொவிட் 19 நோய்த் தொற்றைக் கண்டு அறிவதற்காக, ஆய்வகங்கள் பயன்படுத்த வேண்டிய கருவிகளின் தரம் குறித்த வரையறை ஒன்றை அறிவித்து இருக்கிறது. அதன்படி, அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து நிறுவனம் அல்லது ஐரோப்பிய தரச் சான்று பெற்ற கருவிகளை மட்டுமே பயன்படுத்த முடியும். இன்றைய நெருக்கடியான சூழலில், அரசு வலியுறுத்துவது போல, அமெரிக்கா,  ஐரோப்பியத் தரச்சான்றிதழை எப்படிப் பெற முடியும்?. மத்திய அரசின் அறிவிப்பின்படி, புனேயில் இயங்கி வருகின்ற இந்திய அரசின் நுண்ம நச்சு ஆய்வு நிறுவனம் கூட இயங்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

Advertising
Advertising

 இந்தியாவில் குஜராத்தின் அகமதாபாத்தில்  இயங்கின்ற கோசாரா டயக்னாஸ்டிக்ஸ் என்ற ஒரேயொரு நிறுவனம்தான், மேற்கண்ட சான்றிதழைப் பெற்று இருக்கின்றது. அந்த நிறுவனத்தை மட்டுமே ஏகபோக உரிமையாளராக ஆக்குவதற்கு இந்திய அரசு முயற்சிக்கின்றதா? எனவே, இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டை முடக்குகின்ற, புதிய விதிமுறைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

Related Stories: