மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வரலாறு காணாத அளவிற்கு சரிவு: 45 நிமிடத்திற்கு பங்குச் சந்தை நிறுத்தம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2600 புள்ளிகள் சரிந்து வாரத்தின் முதல் நாளான இன்று கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 700 புள்ளிகள் சரிந்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் 10%-க்கு மேல் சரிந்ததால் 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் 2-வது முறையாக பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்து உள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.46-ஐ தொட்டுள்ளது.   கொரோனா வைரசால் உலக அளவில் தொழில்துறை முடங்கி கிடக்கிறது. இதனால், பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. கடந்த மாதம் 20ம் தேதியில் இருந்து இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. இதுவரை ரூ.45 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 3, 5 மற்றும் 13ம் தேதிகளில் மட்டும் ஏற்றம் கண்டன. மற்ற அனைத்து நாட்களும் முதலீட்டாளர்களுக்கு இழப்பையே அளித்துள்ளன. பல்வேறு நாடுகளுக்கு பரவுவது தீவிரம் அடைந்து வருவதால் இழப்பு தவிர்க்க முடியாதது ஆகி வருகிறது.  நேற்று முன்தினம் தேசிய பங்குச்சந்தை நிப்டி 8,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு கடந்த 2016 டிசம்பரில் ஏற்பட்ட சரிவை விட மோசமான சரிவை சந்தித்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 37 மாதங்களில் இல்லாத சரிவாக 27,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது.

Related Stories: