சிறு, குறு தொழில்களுக்கு நிமிர முடியாத பெரும் அடி: கிருஷ்ணகுமார், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்க தலைவர் (சீமா)

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் (சீமா) கடந்த 1952ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த சீமா அமைப்பின் அங்கத்தினர்கள் தரமான பம்பு செட்டுகள் மற்றும் இன்ஜினியரிங் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இந்திய மற்றும் சர்வதேச அளவில் வீட்டு மற்றும் விவசாயத்திற்கு தேவைப்படும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால் சமீப காலமாக பெரும் இழப்பை இந்த நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.

 இந்தியாவின் முதல் மோட்டார் மற்றும் பம்பு கோவையில் தான் 1930ல் தயாரிக்கப்பட்டது. இந்தியாவில் பம்பு செட் தேவையில் 55 சதவீதம் கோவை நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன. இவற்றின் சந்தை மதிப்பு சுமார் ₹16 ஆயிரம் கோடியாகும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் மத்திய மற்றும் மாநில அரசிற்கு சீமாவின் ஆதரவினை தெரிவித்து கொள்கின்றோம். சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளினால் பொருளாதார இழப்பினை சந்திக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு மக்களை மட்டுமல்ல, எங்களை போன்ற வியாபாரிகளையும் முடக்கி வருகிறது.  தற்போது ஏற்பட்டுள்ள மாறுபட்ட சூழ்நிலை மற்றும் தேக்க நிலைகளினால் பணப்புழக்கம் குறைந்துள்ளது. ஏற்கனவே, சிறுகுறு நிறுவனங்கள் படும்பாட்டை அறிந்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலம் சில நடவடிக்கை எடுத்ததற்கு பிரதமருக்கும், மத்திய நிதி அமைச்சருக்கும் சீமா சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்கின்றது.

மேலும், நிலைமைகளை சமாளிக்க சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளோம். சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள் பெற்றுள்ள கடன் மற்றும் புதிய கடன்களின் மீதான வட்டியினை வங்கிகள் மூலம் குறைக்க வேண்டும். புதிய வட்டியில்லாத விரைவான கடன்கள் இந்த பொருளாதார சரிவு சூழ்நிலைகளில் இருந்து மீள பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கும் கொரோனா பாதிப்புகளால் கொள்முதல் மற்றும் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.  இந்த கடன்கள் நடப்பு மூலதனம் அல்லது விற்பனை சரக்குகளின் மதிப்பிற்கு வழங்கப்பட வேண்டும். இஎஸ்ஐ மற்றும் பிஎப் நிறுவனங்கள் செலுத்த 6 மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். பொருட்கள் நாடெங்கும் கொண்டு செல்ல ஏதுவாக போக்குவரத்து பாதிப்பு குறையும் வரை இ வே பில் விலக்கு அளிக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி செலுத்த சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு 3  மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.

சிறு,குறு பம்ப் செட் உற்பத்தி நிறுவனங்களுக்கு திருப்பி வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி ரீபண்டுகளை உடனடியாக வழங்க வேண்டும். இதற்காக ஆவணங்களை பெறுவதையும் ஆய்வு செய்வதையும் தற்போது தவிர்க்க வேண்டும். ஜிஎஸ்டி மற்றும் ஐடி துறைகளில் நிறுவனங்களுக்கு அபராத தொகை வசூலிப்பதை ஒரு வருடம் நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு மற்றும் பொது நுகர்வோர் அனைவருக்கும் பணப்புழக்கம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.   கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நாங்கள் மீண்டும் வியாபாரத்தை நடத்த வேண்டும்; எங்களுக்கு ஏற்கனவே உள்ள கெடுபிடிகளுடன் கொரோனா பாதிப்புகளும் சேர்ந்து பெரும் அடி கொடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு தேவையான தீர்வுகளை அரசு தான் சொல்ல வேண்டும். இந்த சிறு குறு தொழில்கள் அழியாமல் காப்பது அரசுகளின் கைகளில் தான் உள்ளது.

பொருளாதார சரிவு சூழ்நிலைகளில் இருந்து மீள பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கும் கொரோனா பாதிப்புகளால் கொள்முதல் மற்றும்

விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

Related Stories: