வடமாநில தொழிலாளர்கள் அடிக்கடி சொந்த ஊர் பயணம்; கூடங்குளம் சுற்றுவட்டாரத்தில் கொரோனா பீதி: அணுமின் நிலைய கட்டுமானப் பணியால் அச்சம்

நெல்லை: அணுமின் நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள் எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி உலா வருவதால் கூடங்குளம் சுற்றுவட்டார மக்களிடையே கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது. அடிக்கடி சொந்த ஊர் சென்று திரும்பும் வடமாநில தொழிலாளர்கள் மூலம் கொரோனா பரவும் அச்சுறுத்தல் இருப்பதால் உடனடியாக கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4- வது  அணுஉலை கட்டுமான பணிகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமான வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் ஒப்பந்த பணியில் பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் கூடங்குளம், பெருமணல், இடிந்தகரை, செட்டிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர்கள் தங்களது குடியிருப்புகளை அமைத்துள்ளனர். இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அடிக்கடி சென்று வருவதாகவும், இவர்கள் மூலம் கொரோனா வைரஸ் இந்த பகுதிகளில் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், இந்த பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு முறையான மருத்துவ வசதிகளை அரசு செய்து தர வேண்டும். மேலும் தொடர்ந்து அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது. கூடங்குளம் பகுதியை பொறுத்தவரை இந்தியாவில் அதிகமாக மக்கள் நடமாடும் பகுதியாக அமைந்துள்ளது.

எனவே அங்கு நிரந்தரமாக குறைந்தபட்சம் ஒரு 4 மாதங்களுக்கு இந்த பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்பது தான் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்கும் போது; நாங்கள் தொடர்ந்து கூடங்குளம் பகுதிகள், அணுமின் நிலைய பகுதிகள் மற்றும் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் உள்ள தொழிலாளர்களின் சோதனைகள் முறையாக தாங்கள் முகாம்கள் அமைத்து நடத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.

Related Stories: