கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு மாற்று சிகிச்சை அளித்ததாக வதந்தி பரப்பிய நபருக்கு ஏப்ரல் 3 வரை சிறை!!

கோவை : கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு மாற்று சிகிச்சை அளித்ததாக வாட்ஸப்பில் வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கரை ஏப்ரல் 3 வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஹீலர் பாஸ்கர் என்பவர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாகவும், இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவு வருவதாகவும் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் ஹீலர் பாஸ்கர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குனியமுத்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Related Stories: