குடியாத்தம் அருகே பரபரப்பு அம்மன் கோயிலில் திருட முயற்சி : உண்டியலில் பணம் இல்லாததால் சுவாமி சிலை சேதப்படுத்திய ஆசாமிகள்

குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தில் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் காலை, மாலை வேளையில் பூஜை நடப்பது வழக்கம். மேலும், ெவள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்றுமுன்தினம் இரவு பூஜை முடிந்து கோயில் நிர்வாகி கோயிலை பூட்டிக்கொண்டு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கோயிலுக்கு பக்தர்கள் வந்தனர்.

அப்போது, கோயில் கேட் உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோயில் உள்ளே சென்று கருவறையில் பார்த்தபோது உள்ளே இருந்த அம்மன் சிலை கீழே தள்ளப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருந்தது.

கோயிலில் மர்ம ஆசாமிகள் திருட முயன்று இருந்தது தெரிய வந்தது. மேலும், கோயிலில் திருட முயன்ற மர்ம ஆசாமிகள் கோயில் உண்டியலில் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்து அம்மன் சிலையை சேதப்படுத்தியதாக ெதரிகிறது. இதுகுறித்து குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: