திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பக்தருக்கு கொரோனா அறிகுறி: கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை மூடல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை மூடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 20 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் இன்று ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வந்தனர். அதில் தயாசாகர் என்ற பக்தருக்கு காய்ச்சல் இருமல் இருந்ததோடு இவர்கள் அனைவரும் வாரணாசி சுற்றுலாத் தலத்திற்கு சென்றுவிட்டு ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வந்ததும் தெரியவந்துள்ளது.

தயாசாகருக்கு கொரோனா அறிகுறி உள்ளதால் திருமலையில் உள்ள தேவஸ்தனம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் உள்ளதா என்பது குறித்து அவரது இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றனர். ஏழுமலையான் கோவில், அன்ன பிரசாத கூடம், மெட்டை அடிக்கக்கூடிய கல்யாண கட்டா ஆகிய பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் எப்பொழுதும் அதிக அளவில் இருக்கும் என்பதால் வைரஸ் வேகமாக பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் ஏழுமலையான் கோவிலை மூடுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக  அரசுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். அரசு உத்தரவு வந்தவுடன் ஒரு சில மணி நேரங்களில் ஏழுமலையான் கோவில் மூடுவது குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழுமலையானுக்கு பக்தர்களை அனுமதிக்காமல் அர்ச்சகர்கள் மட்டும் ஆறு கால பூஜைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லக்கூடிய மலைப்பாதை இரண்டும் மூடப்பட்டுள்ளது.

Related Stories: