குடியுரிமை திருத்த சட்ட போராட்ட மேடையில் நடந்த திருமணம்

மேலூர்: மேலூரில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் நேற்று திருமணம் ஒன்று நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் செக்கடியில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. 9வது நாளான நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது திருமணம் ஒன்று போராட்ட மேடையிலேயே நடத்தப்பட்டது.

மேலூரை சேர்ந்த அன்வர் அலியின் மகள் ஆயிஷாபீவிக்கும், மதுரை உத்தங்குடியை சேர்ந்த செய்யது இப்ராஹிம் மகன் நத்தர்ஷாவிற்கும் மேலூரிலுள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் திடீரென திருமணம், போராட்டம் நடைபெறும் இடத்திற்கு மாற்றப்பட்டது. இஸ்லாமிய முறைப்படி மேடையில் திருமணம் நடைபெற்றது. திமுக நகர் செயலாளர் முகமது யாசின் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Related Stories: