கொரோனா பரவல் காரணமாக ஈஸ்டர் கொண்டாட்டம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் : வாட்டிகன் தேவாலயம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரோம் : கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டு ஈஸ்டர் கொண்டாட்டம் பக்தர்களை நேரில் வரவழைக்காமல் நடத்தப்படும் என்று ஈஸ்டர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவுக்கு பிறகு இத்தாலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலியில் ஒரே நாளில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்குதலில் 368 பேர் உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,000 கடந்துள்ளது.

இந்நிலையில் இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள வாட்டிகன் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ஆண்டுதோறும் கோலகமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிகளவில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்குமாறு உலக அளவில் கோரிக்கை எழுந்துள்ளது. எனவே இந்த ஆண்டு ஈஸ்டர் கொண்டாட்டம் பக்தர்களை நேரில் வரவழைக்காமல் நடத்தப்படும் என்றும் வாட்டிகன் தேவாலயம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் போப் ஆண்டவரின் பொதுச் சந்திப்புகளை ஏப்ரல் 12ம் தேதி வரை வாட்டிகனின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே காண முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: