இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மோடியிடம் வேண்டுகோள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போன் மூலம் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, முகக்கவசம், கிருமி நாசினி  தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பிரதமர் மோடி ஒப்புக் கொண்டார். இது குறித்து ஜெருசலேமில் பெஞ்சமின் அளித்த பேட்டியில், ‘‘மூகக்கவசம் மற்றும் மருந்துகள் தயாரிப்பு மூலப் பொருட்களுக்கு பல நாடுகளை சார்ந்திருப்பதாகவும், அவற்றின் ஏற்றுமதியை இஸ்ரேலுக்கு அனுமதிக்க வேண்டும் என எனது நண்பரும், இந்திய பிரதமருமான மோடியிடம் பேசினேன்’’ என்றார். இதற்கு பிரதமர் மோடி ஒப்புக் கொண்டதாக இஸ்ரேல் சுகாதாரத் துறை துணை இயக்குனர் ஜெனரல் இடாமர் கிரட்டோ தெரிவித்தார்.

Related Stories: