தமிழகத்தில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை; கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை விடுமுறை

சென்னை: தமிழகத்தில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு மார்ச் 31-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16-ம் தேதி முதல் 31-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரியில் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய தொற்று நோய் என ஐநா.வால் அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 76 ஆக இருந்த நிலையில் இன்று 81 ஆக அதிரித்துள்ளது.

இதில் கேரள மாநிலத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு மார்ச் 31-ம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கேரளாவை ஒட்டியுள்ள 7 மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: