இந்தியாவின் உசேன் போல்ட்

நன்றி குங்குமம் முத்தாரம்

தமிழ்நாட்டுக்கு ஜல்லிக்கட்டு என்றால் கர்நாடகாவிற்கு  எருமைகளுடன் சேர்ந்து ஓடக்கூடிய கம்பாலா என்ற பாரம்பரிய விளையாட்டு.இதில் உசேன் போல்ட்டுக்கு இணையான வேகத்தில் ஓடி பரபரப்பை ஏற்படுத்தினார் சீனிவாச கவுடா.“ என்னால் உசேன் போல்ட்டின் சாதனையை முறியடிக்க முடியாது. நான் வேகமாக ஓடவில்லை. நான் அப்படி வேகமாக ஓடியதற்கு எருமைதான் காரணம்...” என்று சொல்லியுள்ளார் கவுடா. 100 மீட்டர் தூரத்தை, 9.55 வினாடிகளில் கவுடா கடந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலானது.

உசேன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.58 விநாடிகளில் கடந்திருந்தார். ஆனால், இருவரும் ஓடியது வெவ்வேறு தளங்களில். அதனால் கவுடாவை இந்தியாவின் உசேன் போல்ட் என புகழ ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் நிஷாந்த் ஷெட்டி என்ற கம்பாலா வீரர் 9.51 விநாடிகளில் 100 மீட்டர் தூரத்தைக் கடந்து கவுடாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

Related Stories: