சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் மரியாதையை உறுதி செய்ய வேண்டும்: ஜனாதிபதி அழைப்பு

புதுடெல்லி: `சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களின் பாதுகாப்பையும் அவர்களுக்கு அளிக்கும் மரியாதையையும் மீண்டும் உறுதிபடுத்த உறுதி ஏற்போம்,’ என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி உலக நாடுகள் பலவும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர்களை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஆற்றிய உரையில் கூறியதாவது: சர்வதேச மகளிர் தின உளமார்ந்த வாழ்த்துக்களை அனைத்து பெண்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன். நல்லதொரு சமுதாயத்தை, நாட்டை, உலகினை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும், அயராது உழைக்கும் பெண்களுக்கு மரியாதை அளிக்கும் நாளே மகளிர் தினம்.

சமூகத்தின் அனைத்து துறைகளிலும் தங்கள் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, தியாகம் ஆகியவற்றால் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய தனித்துவமிக்க சாதனைப் பெண்களை வாழ்த்துவதே மகளிர் தினமாகும். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில், பெண்களின் பாதுகாப்பையும், அவர்களுக்கு அளிக்கும் மரியாதையையும் மீண்டும் உறுதிபடுத்த உறுதி ஏற்போம். இதன் மூலமே, அவர்கள் தங்கள் இலக்கினை நம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும் தடையின்றி அடைய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: