மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கான தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கர்நாடக  மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல், மேட்டூருக்கு கடந்த 29ம் தேதி தண்ணீர் வரத்து  அதிகரித்தது. இந்நிலையில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறக்கப்படும்  தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல், மேட்டூருக்கான நீர்வரத்து சரிந்தது.  கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1400 கனஅடியாக நீடிக்கிறது.

இதேபோல்  மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று முன்தினம் 433 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை 188 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக  விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று  காலை முதல் விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரத்தை  காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் சரியத் துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் 105.11 அடியாக  இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், நேற்று காலை 105 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 71.47  டிஎம்சியாக உள்ளது.

Related Stories: