இலங்கை கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியது

கொழும்பு: இலங்கை கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியது. நெடுந்தீவு பங்குத்தந்தை எமிபால் அடிகளார் கொடியேற்றினார். 14 இடங்களில் சிலுவை நிறுத்தப்பட்டு ஒவ்வரு நிலைப்பாடும் விளக்கப்பட்டது. சிலுவைப் பாதையை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இரவு புனித அந்தோனியாரின் தேர்பவனி நடந்தது. இந்தியா இலங்கை இரு நாட்டு பக்தர்களும் சந்தித்து மனம் மகிழ்வோடு திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்... திருவிழாவிற்கு தமிழகத்தில் இருந்து 2881பேர் பதிவு செய்து இருந்த நிலையில் 2070 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.

Related Stories: