கொரோனா தாக்கம் உள்ள நாடுகளுக்கு சென்று வந்த அலுவலர்கள், மாணவர்களை தனிமைப்படுத்த பல்கலைக் கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

டெல்லி : கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு பல்கலை மானியக் குழு (யுஜிசி) சில புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.சீனாவில் துவங்கி தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கரோனா வைரஸின் காரணமாக இதுவரை சீனாவில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் இதுவரை 31 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரவி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, தலைநகர் டெல்லியில் ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுஅலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு பல்கலை மானியக் குழு (யுஜிசி) சில புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.தனது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அளித்துள்ள வழிகாட்டுதலின்படி, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து, கோரோனா பாதிப்பு உள்ள நாடுகளுக்கு பணி நிமித்தம் சென்று வந்த பல்கலை அலுவலர்கள் மற்றும் கல்வித் திட்டத்தின் படி சென்று வந்த மாணவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு கோரோனா  நோய்த்தொற்று உள்ளதா என்பது குறித்த சோதனைகளை மேற்கொள்ளுமாறும், இதனை அவசர நடவடிக்கையாக கருதி செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: