தடுப்பூசி போட்டு கொண்ட 3 பேர் ரத்தம் உறைந்து பலி: இலங்கை அரசு அதிர்ச்சி

கொழும்பு: இலங்கையில் அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட 3 பேர் ரத்தம் உறைந்து பரிதாபமாக பலியாகினர். இந்தியாவில் தயாரிக்கப்படும் அஸ்ட்ராஜெனகாவின் 9 லட்சத்து 25 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு இந்திய அரசு இலவசமாக வழங்கியது. இதையடுத்து, அங்கு கடந்த ஜனவரி 29ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை அங்கு 21 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறியதாவது:  உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி, இலங்கையில் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஊசி போட்டு கொண்ட 6 பேருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதில், 3 பேர் உயிரிழந்தனர். ஆனால், உலகளவில் ஏறக்குறைய 20 கோடி பேர் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி போட்டுள்ளனர்.  அதன் அடிப்படையில் பார்க்கும் போது, அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிக்கும், ரத்தம் உறையும் பிரச்னைக்கும் நம்பத் தகுந்த அளவில் சிறிது தொடர்பு இருக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. தற்போது, ரத்தம் உறையும் பிரச்னைக்கு இந்த தடுப்பூசி காரணமல்ல என்று கூறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  …

The post தடுப்பூசி போட்டு கொண்ட 3 பேர் ரத்தம் உறைந்து பலி: இலங்கை அரசு அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: