கர்நாடக பட்ஜெட்டில் முதல் முறையாக சிறுவர் நலனுக்காக ரூ.36,340 கோடி: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக அரசின் 2020-21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை முதல்வர் எடியூரப்பா நேற்று  பேரவையில் தாக்கல் செய்தார். அவர் தலைமையில் பாஜ ஆட்சி அமைந்த பின் தாக்கல் செய்த முதலாவது பட்ஜெட் இதுவாகும்.

இதில் பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், மாணவர்கள், ஆட்டோ டிரைவர்கள் உள்பட பல தரப்பினரின் நலனை மையமாக வைத்து ரூ.2,37,893 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். பொதுவாக ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம்.

ஆனால் முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்த பட்ஜெட்டில் துறை வாரியாக முக்கியத்துவம் கொடுக்காமல் வேளாண், பொதுநலம், பொருளாதார வளர்ச்சி, பெங்களூரு மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு, நிர்வாக சீர்திருத்தம் ஆகிய 6 பகுதிகளாக பட்ஜெட்டை பிரித்து அதற்குள் துறைகளை இணைத்து புதிய கோணத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். 18 துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதவீதம் நிதியை சிறுவர் நலனுக்காக ஒதுக்கி ரூ.36,340 கோடியில் நலத்திட்டங்களை அறிவித்தார். பெட்ரோல், டீசல் மீது 3 சதவீதம் உயர்த்தியும், மதுபானங்கள் மீது 6 சதவீதம் வரியை உயர்த்தியும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் ரூ.400 கோடி செலவில் 25 அடுக்குகள் கொண்ட அரசு அலுவலக கட்டிடம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்வர் எடியூரப்பா அறிவித்தார்.

Related Stories: