வருஷநாடு: வனப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கடமலை மயிலை ஒன்றியத்தில் மூன்று வனச்சரகங்கள் உள்ளன. இங்கு வருஷநாடு வனச்சரகம் மேகமலை வனச்சரகம் கண்டமனூர் வனச்சரகம் உள்ளது. இந்த வனச்சரக பகுதிகளில் அதிகளவில் தனியார் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும் இதை தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வனச்சரக கட்டுப்பாட்டிலும் வனச்சரக மற்றும் வன குடியிருப்பு கட்டிடங்கள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.