கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி: உலக வங்கி அறிவிப்பு

வாஷிங்டன்: உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் ஏழை நாடுகளுக்கு உதவும் வகையில் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலக வங்கி நிதியாக ஒதுக்கியுள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 70 நாடுகளில் இந்த வைரஸ் பாதித்துள்ளது. சீனாவில் மட்டும் கொரோனா வைரசுக்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியா, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது.

தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு 5,328 பேருக்கும், இத்தாலியில் 2,502 பேருக்கும் பரவியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 9 பேரும், ஈரானில் 77 பேர் பெரும் உயிரிழந்துள்ளனர். இது, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு உலகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ உலக வங்கி முடிவு செய்துள்ளது.

ஏழை நாடுகளுக்கு உதவும் வகையில் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலக வங்கி நிதியாக ஒதுக்கியுள்ளது. அதற்காக ஏழை நாடுகளுக்கு உதவும் வகையில் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலக வங்கி நிதியாக ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ்; கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏழை நாடுகள் மேலும் நிதிச்சுமைக்குள்ளாகியுள்ளன. எனவே அந்த நாடுகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.

இதன் மூலம் கொரோனா நோய் பரப்பும் கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான மருந்துகள் மற்றும் சுகாதார பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்க நிதி பயன்படுத்தப்படும். நிதி உதவி அதி விரைவில் வழங்கப்படும். இதன் மூலம் பல மனித உயிர்கள் காப்பாற்றப்படும் எனவும் கூறினார். முன்னதாக எபோலா, ஷிகா வைரஸ் நோய்களின் தாக்கத்தின் போதும் உலக வங்கி இது போன்று நிதி உதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: