என்பிஆர், என்ஆர்சியை நடைமுறைப்படுத்தினால் 234 எம்எல்ஏக்களையும் கடத்துவோம்: ‘அல்ஹக்’ அமைப்பு சார்பில் மிரட்டல் கடிதம்

சென்னை: தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவை ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் உள்ள 234 எம்எல்ஏக்களையும் கடத்துவோம் என்று ‘அல்ஹக்’ என்ற அமைப்பு சார்பில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு திரும்ப பெற்ற கோரி நாடுமுழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களில் மக்கள் அனைவரும் தன்னெழுச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதைபோல், தமிழகத்திலும் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி போராட்டங்கள் நடந்து வருகிறது. ெசன்னை வண்ணாரப்பேட்ைட, சேலம், மதுரை என பல இடங்களில் கடந்த 20 நாட்களாக இஸ்லாமிய அமைப்புகள் தங்களது குடும்பங்களுடன் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். வண்ணாரப்பேட்டையில் அமைதியான முறையில் நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடி நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னை வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிக்கு நேற்று முன்தினம் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தை இன்ஸ்பெக்டர் ரவி பிரித்து பார்த்த போது, அதில் ‘அல்ஹக்’ என்ற தலைப்பில், நாங்கள் 250 பேர் இந்த இயக்கத்தில் உள்ளோம். நாங்கள் ஒரு இயக்கமாக செயல்பட்டு வருகிறோம். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த கூடாது. அவ்வாறு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தினால் தங்கள் இயக்கத்தில் உள்ள 250 பேரும் சேர்ந்து தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கடத்துவோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை கண்டு அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் ரவி உடனே சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதனுக்கு தகவல் கொடுத்தார். அதன்படி உயர் அதிகாரிகள் மர்ம கடிதத்தை கைப்பற்றி எங்கு இருந்து வந்தது. யார் அனுப்பியது. இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? ‘அல்ஹக்’ அமைப்பு தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் அமைப்பா? இந்த அமைப்பு ஏற்கனவே உள்ளதா? அல்லது என்ஆர்சி, என்பிஆர் அமைப்பை எதிர்க்க புதியதாக தமிழகத்தில் உருவாக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மிரட்டல் கடிதம் அனுப்பிய ‘அல்ஹக்’ அமைப்பை சேர்ந்தவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: