குலுக்கல் முறையில் வழங்கி வந்த சிறப்பு சேவை டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு: திருப்பதி தேவஸ்தானம் திடீர் முடிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடக்கும் வாராந்திர மற்றும் தினசரி சேவைகளில் அபிஷேகம், அர்ச்சனை, தோமாலை, வஸ்திரம் ஆகிய சேவைகள் அரைமணி நேரம் மூலவர் முன்பு அமர்ந்து காணக்கூடிய சேவைகளாகும். வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த சேவைைய பார்க்கக்கூடிய நிலை இருந்ததால், ஒட்டுமொத்தமாக முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தேவஸ்தானம் ரத்து செய்தது.

இதைத் தொடர்ந்து சாதாரண பக்தர்களும் இந்த சேவையில் பங்கேற்பதற்காக அந்த டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் வழங்கும் நடைமுறையை கொண்டு வந்தது. இதற்காக ஒவ்வொரு மாதமும் தினமும் எந்தெந்த நாட்களில் எந்தெந்த டிக்கெட்டுகள் உள்ளது என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு வந்தது. அவ்வாறு வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது சாதாரண பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை தேவஸ்தானம் பாதியாக குறைத்துள்ளது. இந்த முடிவு சாதாரண பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Related Stories: