தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 67வது பிறந்தநாள்: ராகுல் காந்தி, கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு [பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 1953ஆம் ஆண்டு பிறந்து 14 வயதில் அரசியலில் களம் கண்ட மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் பகுதி பொதுச் சபை உறுப்பினர், தி.மு.க இளைஞரணி செயலாளர், தி.மு.க துணை பொதுச் செயலாளர், தி.மு.க பொருளாளர், தி.மு.கவின் செயல் தலைவர் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்ந்து இன்று உடன்பிறப்புகளின் தலைவனாக உயர்ந்து நிற்கிறார். தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு சந்தித்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் 38 இடங்களில் வெற்றி, 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13 இடங்களில் வெற்றி பெற்றார்.

தமிழக மக்களுக்காகவும், சமூகநீதிக்காகவும், சமதர்மம் பேணவும் பாசிச, அராஜக சக்திகளுக்கு எதிராக சமர்க்களத்தில் நின்று அயராமல் போராடி வருகிறார் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்தத் தலைவருமான க.அன்பழகன் உடல்நலம் இல்லாமல் இருப்பதால், தனது பிறந்தநாளைக் கொண்டாடப்போவதில்லை எனவும், ஆகையால் தொண்டர்கள் தன்னை சந்திக்க வர வேண்டாம் எனவும் சில தினங்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் “தோல்விகளைக் கண்டு துவளாமல், வெற்றிகளைக் கண்டு இறுமாப்பு கொள்ளாமல் தொடர்ந்து பயணித்தபடி இருக்கும் உங்கள் உழைப்பை எண்ணி வியக்கிறோம்! தினமும் உம்மிடம் கற்கிறோம்! பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா!” என கூறினார்.

கி.வீரமணி

சோதனைகளை சாதனைகளாக்கி இந்தியாவிற்கே வழிகாட்டியாய், தணலில் இட்ட தங்கமாக ஒளிரும் தி.மு.கவின் ஒப்பற்ற தலைவர் வாழ்க வளர்க வெற்றிகள் குவிக!” என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளார்.

ராகுல் காந்தி எம்.பி.

“பிறந்தநாள் காணும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது வாழ்த்துகள். அவர் நலத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ ஆசீர்வதிக்கப்படுவார்.”என ராகுல் காந்தி எம்.பி கூறினார்.

வைகோ

“ஆருயிர்ச் சகோதரர் மு.க.ஸ்டாலின், தி.மு.கழகத்தை எஃகு அரணாகக் கட்டிக்காத்து வருகிறார். அவரது அடுத்த பிறந்தநாளில் முதல்வர் நாற்காலி உறுதி செய்யப்பட்டிருக்கும்.” என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்

“இன்று பிறந்தநாள் காணும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! சமூகநீதியை, ஜனநாயகத்தைக் காக்கும் அறப்போராட்டத்தில் தி.மு.கவுடன் உற்றதுணையாக நிற்போம்.” என  தொல்.திருமாவளவன் வாழ்த்து! கூறினார்.

கமல்ஹாசன்

“அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திட என் மனமார்ந்த வாழ்த்துகள்.” என ‘கலைஞானி’ கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Related Stories: