மலேசியாவின் புதிய பிரதமராக மொகைதீன் யாசின் நாளை பொறுப்பேற்பு

கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய பிரதமராக மொகைதீன் யாசின்(72) நாளை பொறுப்பேற்க உள்ளார். இதுவரை மலேசிய பிரதமராக இருந்த மகாதீர் முகமது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய பிரதமர் தேர்வு பொறுப்பேற்க உள்ளார்.

தாம் மேற்கொண்ட சில நடவடிக்கைகளின் மூலம் மொகைதீன் யாசின் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார் என்பதை நம்ப முடிகிறது என்பதால் அவரை பிரதமராக நியமிப்பதாக மாமன்னர் அறிவித்துள்ளார்.

மாமன்னரின் இந்த முடிவை மலேசிய மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மொகைதீன் யாசின் கேட்டுக்கொண்டுள்ளார். நாளை மார்ச் 1ஆம் தேதி 72 வயதாகும் மொகைதீன் யாசின் மலேசியாவின் எட்டாவது பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

Related Stories: