புதுக்கோட்டை நகரில் ஆம்னி பேருந்துகள் நிறுத்த தனி இடம் ஒதுக்க வேண்டும்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஆம்னி பேருந்துகளுக்கு தனியே பேருந்து நிலையத்து நிலையம், பயணிகளை இறக்கிவிட வரும் வாகனங்கள் நிறுத்துவத தனியே இடவசதியை ஏற்படுத்தி தரவேண்டும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதுக்கோட்டை நகராட்சியில் கடந்த 1981ம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் பெருகி வரும் சாலை போக்குவரத்தால் தனியார், அரசு பேருந்துகளின் இயக்கம் அதிகரித்தது. இதனால் இந்த பகுதியில் இருந்து ஆம்னி பேருந்துகள் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக பேருந்து நிலையத்துக்குள் இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளே நுழையும் பேருந்துகள் மிகவும் தாமதமாக வெளியேறும் நிலை ஏற்பட்டது.

Advertising
Advertising

இந்நிலையில், பேருந்து நிலையத்தின் தரைப்பகுதிகள், வணிக வளாகங்கள் ஆகியவை சிதிலமடைந்தன. அதில், கான்கிரீட் தரைத்தளம் குண்டும் குழியுமாக மாறியது. இதனால் பொதுமக்களும், பயணிகளும் சிரமப்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பல காலகட்டங்களில் கோடிக்காணக்கான ரூபாய் செயலவு செய்து புதிய பேருந்து நிலையம் புதிப்பிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. சில நேரங்கள் மராமத்து பணிகளும் நடைபெற்றது. இத்தகைய சூழலில், புதுக்கோட்டையிலிருந்து 200க்கும் மேற்பட்ட புறநகர் பேருந்துகள் சென்னை உள்பட பல்வேறு ஊர்களுக்கு இயங்கி வருகின்றன. திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்திய பிறகு சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, ராமநாதபுரம் ஆகிய பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் திருச்சி விமானநிலையத்தை தேர்வு செய்கின்றனர்.

இதனால் ராமேஸ்வரம், ராமநாதபுரம், தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை, பரமக்குடி, இளையான்குடி ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 40க்கும் மேல்பட்ட ஆம்னி பேருந்துகள் சென்னைக்கும், சில பேருந்துகள் பெங்களூர், கோவைக்கும் புதுக்கோட்டை வழியாகச் சென்று வருகின்றன. மேலும் புதுக்கோட்டை, அறந்தாங்கி, பொன்னமராவதி உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் தினமும் 10 ஆம்னி பேருந்துகள் சென்னைக்கு சென்று வருகின்றன. இதன்மூலம் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில்,இவ்வளவு எண்ணிக்கையில் நெடுந்தொலைவு செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதி இல்லாத காரணத்தால் புதுகை நகரில் இரவு 9 மணியிலிருந்து 11 மணி வரை இப்பேருந்துகளில் செல்லும் பயணிகள் பழைய அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையத்தில் மேல்புறத்திலுள்ள சாலை, அரசு மகளிர் கல்லூரி செல்லும் சாலை, உழவர் சந்தை சாலை போன்ற வெவ்வேறு இடங்களுக்குச் சென்று சிரமப்படும் நிலை தொடர்கிறது. இரவு நேரங்களில் வெவ்வேறு இடங்களில் பெண் பயணிகளை இறக்கி விடுவதால் அவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இது ஒரு புறம் இருக்க பேருந்துகளுக்கு தன் உறவினர்களை வாகனங்களில் அழைத்து வருபவர்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.

கார்கள் நிறுத்தவும் இடம் வேண்டும்

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பகுதியில் இருக்கும் மக்கள் சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு செல்லவும், திருச்சி விமான நிலையத்திற்கு செல்லவும் ஆம்னி பேருந்து பயணத்தை அதிகம் தேர்வு செய்கின்றனர். இந்த பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் புதுக்கோட்டை நகருக்கு வந்து செல்கின்றன.

மேலும் புதுக்கோட்டையில் இருந்தும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்துகளுக்கு என தனியே பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். மேலும் பேருந்து நிலையத்திற்கு உறவினர்களை விட வருவோர்களின் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் ஊராட்சி அலுவலகம் செல்லும் சாலை பகுதியில் நிறுத்த இடவசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

Related Stories: